2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

‘பிரேரணை செல்லுபடியாகாது’

Editorial   / 2017 ஓகஸ்ட் 11 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

“வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியால் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை செல்லுபடியாகாது”

என்று, சபாநாயகர் கரு ஜயசூரிய, நேற்று(10) மாலை, நாடாளுமன்றத்துக்கு அறிவித்தார். 

“அவர், தன்னுடைய அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்துவிட்டமையால், அந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை செல்லுபடியற்றதாகிவிட்டது” என்றும் அவர் தெரிவித்தார்.  

“அமைச்சர் ரவிக்கு எதிராகச் சமர்ப்பிக்கப்பட்ட, நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்துக்கு எடுத்து கொள்வதா, இல்லையா? நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்குவதா, இல்லையா? என்பது தொடர்பில், வியாழக்கிழமை​ அறிவிக்கப்படும்” என்று, சபாநாயகர் கரு ஜயசூரிய, செவ்வாய்க்கிழமையன்று (08) நாடாளுமன்றத்துக்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.    

அமைச்சுப்பதவியை இராஜினாமாச் செய்த ரவி கருணாநாயக்கவைப் பாராட்டிய, எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனை, மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆதரவு அணியான ஒன்றிணைந்த எதிரணியினர், மிகவும் மோசமாகத் தூசித்தனர். 

இதனையடுத்து, ஆத்திரம் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் சபைக்கு நடுவே, மிகவும் ஆவேசமாகப் பாய்ந்தனர். இதனால், சபையில், நேற்று (10) சற்றுச் சலசலப்பு ஏற்பட்டது.  

அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் இராஜினாமா ஒரு துணிச்சலான செயலென்று, சம்பந்தன் பாராட்டி தன்னுடைய உரையைத் தொடர்கையில், ஒன்றிணைந்த எதிரணி உறுப்பினர்கள் கூச்சலிட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .