2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’ புதிய அரசமைப்பு 78ஐ விட பலமிக்கது ’

Editorial   / 2019 ஜனவரி 14 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய அரசமைப்பானது, 1978ஆம் ஆண்டு அரசமைப்பை விட மிகவும் பலமிக்கதாகக் காணப்படுவதோடு, இதனால், தற்போதைய அரசாங்கம், மிகவும் சக்திவாய்ந்த அர​சாங்கமாக மாறியுள்ளதென, உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.  

காலி மாவட்டத்தில் நேற்று (13) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில்

கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

அங்கு தொடர்ந்துரைத்த அவர், கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதியன்றும் அதே ஆண்டு ஓகஸ்ட் 17ஆம் திகதியன்றும் கிடைக்கப்பெற்ற மக்கள் ஆணையின் பிரகாரம், அரசாங்கம் தனது பணிகளை முன்னெடுத்து வருவதாகவும் தற்போது இந்த அரசாங்கம், மிகவும் பலம்வாய்ந்ததாக மாறியுள்ளதென்றும் தெரிவித்தார்.  

தற்போது உருவாக்கப்பட்டு வரும் புதிய அரசமைப்பு, மிகவும் பலமிக்கதாகக் காணப்படுகின்றதெனத் தெரிவித்த அமைச்சர் அபேவர்தன, இது, இலகுவானதான அரசமைப்பு இல்லையென்றும் சுட்டிக்காட்டினார்.  

இந்த அரசமைப்பின் பிரகாரம், ஒருவருக்கு வேண்டுமென்ற வகையில் அழுத்தங்களைப் பிரயோகிக்க முடியாதென்றும் இலங்கை வரலாற்றில், புதிய அனுபவங்களை இந்த அரசமைப்பு வழங்குகின்றதென்றும் கூறிய அமைச்சர், இதுவரை காலமும், அரச உத்தியோகத்தர்களின் பணிகளுக்கு மாத்திரமே தடை விதிக்கும் முறைமை, அரசமைப்பில் இருந்தது. ஆனால், புதிய அரசமைப்பினூடாக, பிரதமர்களின் பணிகளுக்கும் தடை விதிக்க முடியுமெனக் கூறியதோடு, அவ்வாறான கடினமானதோர் அரசமைப்பே உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.  

இந்த விடயத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கே தாம் நன்றி கூறவேண்டுமெனத் தெரிவித்த அமைச்சர், இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்த ஜனாதிபதிகள், அதை மாற்றுவேன், இதை மாற்றுவேன் என, வெறும் வாய்ப்பேச்சில் காலத்தைக் கழித்ததாகக் கூறியதோடு, தற்போதைய ஜனாதிபதி தான், சொன்ன வார்த்தையைக் காப்பாற்றினார் என்றுச் சுட்டிக்காட்டினார்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .