2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் மக்கள் ஆலோசனைக் கூட்டம்

Editorial   / 2018 ஜூன் 20 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியில், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு முன்னெடுத்துவரும், வீதி விளக்கு முகாமைத்துவம் தொடர்பான தேசிய திட்டமிடல், மின்சாரம், குடிநீர் மற்றும் பெற்றோலியம் ஆகிய துறைகளில் பாவனையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் மாகாண பொதுமக்களிடம் ஆலோசனைகளை கேட்கும் கூட்டம் நேற்று முன்திம் (19) காலை 8.30 மணி மாலை வரை சப்ரகமுவ மாகாணசபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்த பொதுமக்களிடம் ஆலோசனை கேட்கும் நிகழ்வில் மாகாணத்தின் பாவனையாளர்கள், உற்பத்தியாளர்கள் துறைசார்ந்த அதிகாரிகள் குறித்த துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 700க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

இதேவேளை மின்சாரம். குடிநீர் மற்றும் பெற்றோலியம் ஆகிய துறைகளில் பாவனையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வை பெற்றுக் கொடுப்பது, இந்த பொதுமக்களிடம் ஆலோசனைகளை கேட்கும் கூட்டத்தின் நோக்கமென ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

"மின்சார பாவனையாளர்களின் முறைப்பாடுகளை தீர்ப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஏற்கனவே வழிகாட்டல்கள் தயாரித்துள்ளது. இது தொடர்பிலும் மக்கள் தங்கள் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளை மேற்கொள்ள முடியும்." என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பொதுமக்களின் கருத்துக்களை, பரிந்துரைகளுக்கு அமைய ஆணைக்குழுவின் வழிகாட்டல்கள் புதுப்பிக்கப்பட்டு மேலும் திறன்மிக்கதாக்கப்படும். இதற்கு மேலதிகமாக குடிநீர் மற்றும் பெற்றோலிய பாவனையாளர்களின் பிரச்சினைகளும் கருத்திற்கொள்ளப்படவுள்ளது." எனவும் அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .