2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மதுஷ் விவகாரம் :மே.9 தீர்ப்பு

Editorial   / 2019 மே 03 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

டுபாயில் கைதுசெய்யப்பட்ட பாதாள உலக் கோஷ்டியின் தலைவர் மாகந்துரே மதுஷ் தொடர்பிலான வழக்கின் தீர்ப்பு, மே. 9 ஆம் திகதிக்கு டுபாய் நீதிமன்றத்தினால் நேற்று (05) ஒத்திவைக்கப்பட்டது.

தன்னை இலங்கைக்கு நாடுகடத்துமாறு விடுக்கப்பட்டுள்ள கட்டளையை எதிர்த்து, தாக்கல் செய்த மனு, பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்ட போதே, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

அந்த மனுவை, கடந்த 18 ஆம் திகதியன்று ஆராய்ந்த நீதிமன்றம், மே.2 தீர்ப்பளிப்பதாக, அன்று அறிவித்திருந்தது. எனினும், தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது உள்ளிட்ட இன்னும் சில விவகாரங்களை நீதிமன்றத்தின் முன்னிலையில், மதுஷின் சட்டத்தரணி ​கொண்டுவந்திருந்தார்.

இதேவேளை, டுபாயில் வைத்து அவருடன் கைது செய்யப்பட்ட 30 பேர், அவ்வப்போது, இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்.

அதிலொருவரான மாகந்துரே மதுஷின் சகாவான கஞ்சிபான் இம்ரான், ​கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார். இன்னும் சிலர், நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்னும் சிலர், பிணையில் விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .