2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மரணதண்டனை அமுல்: கத்தோலிக்க ஆயர் பேரவை எதிர்ப்பு

Editorial   / 2019 பெப்ரவரி 16 , பி.ப. 01:37 - 1     - {{hitsCtrl.values.hits}}

 

மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

கத்தோலிக்க திருச்சபையின் தற்போதைய நிலைப்பாடு மற்றும் போதனைகளுக்கு அமைய, எந்தவொரு காரணத்துக்காகவும் மரண தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது என, பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், போதைப்பொருளை ஒழிப்பதற்கு கட்டாயமாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என, இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளித்தல்,  போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிப்பதற்கான நியாயமான செயற்பாடொன்றை அனைவரின் ஒத்துழைப்புடனும் முன்னெடுக்க வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட 14 ஆயர்கள் அறிக்கையில் கையொப்பமிட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 1

  • Thiyagaraja Sunday, 17 February 2019 07:09 AM

    If they have the familly and kids if theire victims of this they naver objects. At any cost the states that implement of the death penalty. If Archbishop Patabendige must come and stay in 2-3 nights in North and East . Then only they can realize the seriousness of this sujbect. Thank you

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .