2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

மேற்கு முனையத்தில் ‘இணைந்த’ அபிவிருந்தி

Editorial   / 2021 மார்ச் 03 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகேஸ்வரி விஜயனந்தன்

கொழும்புத் துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை,  இந்தியாவின் ‘அதானி’ நிறுவனம், ஜோன் கீல்ஸ் குழுமம், துறைமுகங்கள் அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றுடன் இணைந்து, அரச மற்றும் தனியார் திட்டமாக 35 வருடங்களுக்கு அபிவிருத்தி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

35 வருடங்களில் அபிவிருத்தி செய்து, நடைமுறைப்படுத்தி மீளக் கையளித்தல் அடிப்படையில், கொழும்புத் துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்காக இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான ஒப்பந்தங்களுக்கு இந்தியா, ஜப்பான் முதலீட்டாளர்களைப் பரிந்துரைக்குமாறு கோரியிருந்த நிலையில், இந்தியா மாத்திரமே முதலீட்டாளர்களைப் பரிந்துரைத்துள்ளதெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதற்கமைய, இருதரப்பு பேச்சுவார்த்தையின் பின்னர், அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தைக் குழுவின் பரிந்துரைக்கமைய, இந்தியாவின் அதானி நிறுவனம், ஜோன் கீல்ஸ் நிறுவனம், துறைமுகங்கள் அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து இத்திட்டத்தை முன்னெடுக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .