2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஹட்டனில் ’காட் திருடி’ கைது

Editorial   / 2017 செப்டெம்பர் 23 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

தன்னியக்க இயந்திர (ஏ.டி.எம்) அட்டையை திருடி, அதில், பொருட்களை கொள்வனவு செய்ததுடன், பணத்தையும் எடுத்திருந்த, பெண்ணொருவரை ஹட்டன் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த, 46 வயதான பெண்ணையே, நேற்று(22) மாலை 5:05க்கு கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த அட்டையை (காட்) பயன்படுத்தி, அப்பெண், 80 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்ததுள்ளதுடன், 30 ஆயிரத்து 790ரூபாய்க்கு, ஆடைகளை கொள்வனவு செய்துள்ளார்.

வங்கியிலிருந்து பணத்தை மீள எடுக்கும் போதும், ஆடைகளை கொள்வனவு செய்யும்போது, சி.சி.டி.வி கமெராவில் பதிவாகியிருந்த காட்சிகளை அடிப்படையாகக் கொண்டே, சந்தேகநபரான அப்பெண்ணை கைதுசெய்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரான அந்தப் பெண்ணை, ஹட்டன் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் இன்று (23) ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .