2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

‘இலக்கிய படைப்புக்கள் மூலம் பிரச்சினைகளை வெளிக்கொணர முடியும்’

Editorial   / 2017 டிசெம்பர் 06 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம், ஒலுமுதீன் கியாஸ்

“ஆக்கபூர்வமான இலக்கிய படைப்பக்கள் சமூகத்தில் பல்வேறு நன்மைகளை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு ஆக்கபூர்வமான விடயங்களை எடுத்தியம்புதல் இன்றியமையாயதது. என்ற தொனிப்பொருளின் கீழ் இலக்கிய கலைப் பெருவிழா திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நேற்று(4) இடம்பெற்றது.

“எம்மை சூழ்ந்து காணப்படுகின்ற சூழல், எம்மை அதற்கேற்ப இசைவாக்கமுடையவர்களாக மாற்றியமைக்கின்றது. ஆரம்பகால இலக்கிய படைப்புக்களுக்கும் இன்றைய இலக்கிய படைப்புக்களுக்கும் இடையே பாரிய வித்தியாசங்கள் காணப்படுகின்றன.

“புதிய படைப்பாளிகளை வெளிக்கொணரல் வேண்டும். அவர்களது திறமைகளை சரியாக இணங்காணல் வேண்டும்.இலக்கிய படைப்புக்கள் மூலம் மக்களது பல பிரச்சினைகளை சரியாக வெளிக்கொணர முடியும் என, மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார இதன்போது தெரிவித்தார்.

மாவட்ட மட்டத்தில் துறைசார் பிரிவு போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு இதன்போது மாவட்ட அரசாங்க அதிபரினால் பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.அருந்தவராஜா, மாவட்ட உதவி அரசாங்க அதிபர் என்.பிரதீபன், மாவட்ட செயலக பிரதான கணக்காளர் எம். கலைஞானசுந்தரம், மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.கே.டி.நெரன்ஜன் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .