2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

‘ஊடகங்களே, ஊடக சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்கின்றன’

Editorial   / 2019 செப்டெம்பர் 17 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத், ஒலுமுதீன் கியாஸ், தீஷான் அஹமட், எப்.முபாரக், ஏ.ஆர்.எம்.றிபாஸ், ஏ.எம்.கீத்

ஒரு சில ஊடகங்களே, ஊடக சுதந்திரத்தைத் துஷ்பிரயோகம் செய்கின்றன என, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் தெரிவித்தார்.

இன்று (17)  நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், தாம் வழங்கிய ஊடக சுதந்திரத்தை சில ஊடகங்கள் துஷ்பிரயோகம் செய்வதாகத் தெரிவித்தார்.

“அமைச்சர் சஜித் பிரேமதாச அண்மையில் தான் ஒரு தொகை பௌத்த விஹாரைகளையும், கோவில்களையும், பள்ளிவாசல்களையும் நிர்மாணிப்பேன் எனக் கூறியிருந்தார். எனினும், அடுத்த நாள் இந்தச் செய்தி சில தமிழ் இணையத்தளங்களில் அமைச்சர் சஜித் ஒரு தொகை பௌத்த விஹாரைகளை நிர்மாணிக்க உள்ளதாக செய்தி வெளியாகின.

“அவர் கூறிய கோவில், பள்ளிவாசல் கதைகளைக் காணக் கிடைக்கவில்லை. இதேபோல், சிங்கள ஊடகங்களில் பள்ளிவாசல்களை நிர்மாணிக்க உள்ளதாகப் பெரிதாக செய்தி வெளியாகின” என சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான சில ஊடகவியலாளர்களால் நேர்மையான பல ஊடகவியலாளர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுவதாகத் தெரிவித்த அவர், இதன்மூலம் இவர்கள் மீண்டும் வெள்ளை வான் கலாசாரத்தை ஏற்படுத்தவா முயற்சி செய்கின்றனர் எனக் கேள்வியெழுப்பினார்.

முன்னொரு காலம் அரசாங்கத்துக்கு எதிராகக் கருத்துத் தெரிவிப்பவர்களது வீடுகளுக்கு வெள்ளை வான் வந்ததாகவும் ஆனால், தாம் இன்று அந்த வெள்ளை வானுக்குப் பதிலாக “சுவசரிய” எனும் உயிர்காக்கும் அம்பூலன்சை கொண்டுவந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .