2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

தனியார் பஸ் உரிமையாளர்கள் 16 பேருக்கு அபராதம்

அப்துல்சலாம் யாசீம்   / 2018 ஜனவரி 23 , பி.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பரிசோதனையின் போது, தனியார் பஸ் உரிமையாளர்கள் 16 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக, கிழக்கு மாகாண பிரதான நடமாடும் பரிசோதகர் ஏ.ஆர்.எம்.பாரூக் தெரிவித்தார்.

இலங்கை போக்குவரத்து சபை பஸ்களுக்கும் தனியார் பஸ்களுக்கும் இடையில் ஏற்பட்ட பயணத்துக்கான நேர முரண்பாடுகளை முகாமைத்துவப்படுத்தும் நோக்கில், இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரியவருகின்றது.

கிழக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் உதயகுமாரின்  பணிப்புரையின் பேரில், இந்த சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு  வருவதாகவும் திருகோணமலையிலிருந்து புறப்படும் கல்முனை,  அம்பாறை பகுதிகளுக்கு செல்லும் தனியார் பஸ்கள் அனைத்தும் சோதிக்கப்பட்டதாகவும்  கிழக்கு மாகாண பிரதான நடமாடும் பரிசோதகர் தெரிவித்தார்.

இதேவேளை அனுமதிப்பத்திரமின்றி தனியார் பஸ்கள், திருகோணமலையிலிருந்து தங்கல்லைக்கு செல்வதாக, பஸ் உரிமையாளர்களால் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து குறித்த உரிமையாளருக்கு எதிராக திருகோணமலை நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, கிழக்கு மாகாண முன்னாள் பெண் அமைச்சர் ஒருவரின் பஸ், அனுமதிப்பத்திரமின்றி சேவையில் ஈடுபட்டதாகவும் குற்றஞ்சாட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .