2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

‘தமிழ் மொழியையும் பயன்படுத்தவும்’

அப்துல்சலாம் யாசீம்   / 2018 ஏப்ரல் 17 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொறவெவ பிரதேச சபைக்  கூட்ட அமர்வுகளை, தமிழ் மொழியில் மொழி பெயர்ப்பதுடன்  அனைத்துக் கடிதங்களையும் தமிழ் மொழியில் அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு,  மொறவெவ பிரதேச சபை உறுப்பினர் சித்திரவேலு சசிகுமார் தெரிவித்தார்.

திருகோணமலை,மொறவெவ பிரதேச சபையின் முதலாவது அமர்வு, கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணைாயளர் எம்.வை.சலீம் தலைமையில் நேற்று (16) நடைபெற்ற போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அத்துடன், மொறவெவ பிரதேச சபையில் ஜந்து பேர்  தமிழ் பேசும்  உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். தனி  சிங்களத்தில் மாத்திரம் சபை அமர்வுகளை நடத்தக்கூடாது. அனைவரும் தெரிந்து கொள்ளக்கூடிய விதத்தில் இனிவரும் காலங்களில் சபை அமர்வுகளை நடத்த வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, மொறவெவ பிரதேச சபை தவிசாளர் தெரிவு மற்றும் உபதவிசாளர் தெரிவு இடம்பெற்ற நிலையில், ஜந்து தமிழ் பேசும் உறுப்பினர்கள் இருந்தும்கூட  உப தவிசாளர் பதவியைக்கூட  வழங்க முன்வராதமையினையிட்டு தான் கவலையை வெளிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .