2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

திருகோணமலை காணிப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு

Editorial   / 2017 செப்டெம்பர் 23 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக், ஏ.எம்.ஏ.பரீத், தீஷான் அஹமட் 

பல வருடங்களாக திருகோணமலையில் நிலவும் காணிப் பிரச்சினைகளுக்கான  நிரந்தரத் தீர்வை விரைவில் பெற்றுத்தருவதாக காணி மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் கயந்த கருணாதிலக உறுதியளித்துள்ளார்.

திருகோணமலையில் நிலவும் காணி பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் நோக்கில், திருகோணமலை மாவட்டத்துக்கான ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூபுக்கும் அமைச்சர் கயந்த கருணாதிலகவுக்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்று, அமைச்சரின் அலுவலகத்தில்  அண்மையில் நடைபெற்றது.

பல வருடங்களாக குடியிருக்கும் காணிகளுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படாமை, பொதுமக்களின் விவசாயக் காணிகளில் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது; வன பரிபாலன சபையால் விதிக்கப்படும் கட்டுபாடுகள், வியாபார நோக்கங்களுக்காக பொதுமக்களின் தனியார் காணிகளை  அரசியல்வாதிகளின் உதவியுடன் கைப்பற்றல், முப்படையினரின் கட்டுபாட்டில் உள்ள தனியார் காணிகளை விடுவித்தல் அல்லது அவர்களுக்கு மாற்று காணிகள் வழங்குதல் போன்ற பல விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டன.

இப்பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்க்கக்கூடிய பிரச்சினைளுக்கான நிரந்தர தீர்வுகளைப் பெற்றுத் தருவதாகவும் முப்படையினரின் கட்டுபாட்டில் உள்ள தனியார் காணிகளின் பிரச்சினைகள் தொடர்பாக, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவுடன் ஆலோசனை செய்வதாகவும் அமைச்சர் இதன்போது உறுதியளித்தார்.

திருகோணமலையில் நிலவும் இப்பிரச்சினைகள் தொடர்பாக நேரடியாக ஆராய்ந்து இது தொடர்பாக  அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அரச அதிகாரிகளுடனும் கலந்துரையாடி  விரைவில் திருகோணமலைக்கு விஜயம் செய்வதாகவும் அமைச்சர் உறுதியளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .