2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

திருகோணமலை மாவட்டத்தில் தேர்தல் நடவடிக்கைகள் மும்முரம்

Editorial   / 2017 டிசெம்பர் 17 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட், எப்.முபாரக் 

நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான நடவடிக்கைகள் திருகோணமலை மாவட்டத்தில் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.

கட்சிகளும் சுயேற்சைக்குழுக்களும் போட்டியிடுவதற்கான ஆயத்தங்களில் இறங்கியுள்ளன. சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, தனித்தும் இணைந்தும் தேர்தலை இவை எதிர்கொள்ளவுள்ளன.

அந்த வகையில், மூதூர் பிரதேச சபைக்கான தேர்தலை, மக்கள்  அபிவிருத்தி ஒன்றியமும் (PDF), நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும் (NFGG) கூட்டாக எதிர்கொள்வதென, இருதரப்பு சூறாசபை உறுப்பினர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தையின் போது உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாளை (18)  தொடக்கம் எதிர்வரும் 21ஆம் திகதிக்குள் மூதூர் பிரதேச சபைக்கான வேட்பு மனுவை இரண்டு அமைப்புகளும் ஒன்றிணைந்து நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கட்சியில் தாக்கல் செய்யவுள்ளன.

இதேவேளை, உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளில் கட்சி வேட்பாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.                

இம்மாவட்டத்தின் பதினொரு பிரதேச சபைகளும், இரண்டு நகர சபைகளுக்குமான உள்ளூராட்சி வேட்பாளர்கள், பொதுமக்களையும் தத்தமது வட்டாரத்துக்குட்பட்ட வாக்காளர்களையும் மும்முரமாக சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர்.

திருகோணமலை மாவட்டத்தில் பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, மஹிந்த அணியின் ஜாதிக பெரமுன, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போன்ற கட்சிகள் தனித்து கட்சி வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.   

திருகோணமலை மாவட்டத்தில் உப்புவெளி, கோமரங்கடவெல, பதவிசிறிபுர போன்ற பிரதேச  சபைகளுக்கான கட்டுப் பணங்கள் ஏற்கெனவே செலுத்தப்பட்ட நிலையில், ஏனைய உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்கள், நாளை ஒப்படைக்கப்படலுள்ளன.

ஒவ்வொரு சந்திகளிலும் ஏட்டிக்குப் போட்டியாக வேட்பாளர்களின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .