2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பெரியாற்றுமுனை வட்டாரத்தில் ‘துரித கதியில் அபிவிருத்தி’

Editorial   / 2018 மே 16 , பி.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச் அஸ்பர்

கிண்ணியா நகர சபைக்குட்பட்ட பெரியாற்றுமுனை வட்டாரம், துரித கதியில் அபிவிருத்தி செய்யப்படுமென, கிண்ணியா நகர சபையின் உறுப்பினர் நிஸார்தீன் முஹம்மட் தெரிவித்தார்.
கிண்ணியா நகர சபையில் நேற்று (15) மாலை நடைபெற்ற, சபையின் இரண்டாம் அமர்வின் போது, பெரியாற்றுமுனை வட்டாரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, தனது பிரேரனைகளை முன்வைத்து உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “கடந்த காலங்களில் எமது வட்டாரத்தை உள்ளடக்கிய பெரியாற்றுமுனை, பெரிய கிண்ணியா, எகுத்தார் நகர் போன்ற பகுதிகள், அபிவிருத்தியில் புறக்கணிக்கப்பட்டன.
“ஆனாலும், இவ்வாறான குறைகள் துரித கதியில் தீர்க்கப்பட்டு அபிவிருத்திகள் இடம்பெறும். குறிப்பாக, உட்கட்டமைப்பு வசதிகள் உட்பட மக்களுடைய பிரச்சினைகளான வீதிப் போக்குவரத்து ஆகியன தீர்க்கப்படும் " என்று தெரிவித்தார்.
இதன்போது அவர், எகுத்தார் நகரிலுள்ள பல்தேவைக் கட்டடத்தில் பொதுநூலகம் அமைத்தல், ரமழான் மாதத்துக்கான கடைத் தொகுதிகள், நகர சபை மைதானத்தை முன்னிலைப்படுத்தி ஏற்பாடு செய்தல், புளூவேர்ட்ஸ் மைதானத்தைப் புனரமைப்புச் செய்தல், பெரியபள்ளி வீதியில் உள்ள மிகுதி 50 மீற்றருக்கான கொங்கிறீட் இடல் உள்ளிட்ட பிரேரனைகளைகளையும், சபையில் முன்வைத்திருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .