2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மீனவத் துறைமுகமாக ஒலுவில் துறைமுகம்

Editorial   / 2019 பெப்ரவரி 28 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுவில் துறைமுகத்தை மீனவத் துறைமுகமாக மாற்றுமாறு, சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்த முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது.

இந்தத் துறைமுகத்தை மீனவத் துறைமுகமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று, துறைமுக அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

சாகலவின் தீர்மானத்தை ஆதரித்து, பைசல் காசிம் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, அம்பாறை மாவட்ட கரையோரக் கிராமங்களும் மீனவர்களும் இன்று கடலரிப்புக் காரணமாக பாரிய ஆபத்தை எதிர்நோக்குவதற்கு ஒலுவில் துறைமுகமே காரணமென்றார்.

இந்தத் துறைமுக நிர்மாணத்தின்போது கடலினுள் பாரிய கருங்கற்களால் தடை அமைக்கப்பட்டதாகவும் இந்தத் தடை ஏற்படுத்தப்பட்ட நாள் முதல் ஒலுவில், நிந்தவூர், பாலமுனை, சாய்ந்தமருது, காரைதீவு, மாளிகைக்காடு ஆகிய பிரதேசங்களில் கரைவலை மீன்பிடி கிட்டத்தட்ட இல்லாமலேயே போயுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எனினும், இந்தத் துறைமுகத்தை மீனவத் துறைமுகமாக மாற்றுவதற்கு, தற்போதைய துறைமுக அமைச்சர் சாகல ரத்நாயக்க நடவடிக்கை எடுத்துள்ளமை மகிழ்ச்சியளிப்பதாகவும் மிக விரைவில் இந்தத் திட்டத்தை அவர் நடைமுறைப்படுத்த வேண்டுமென்றும், இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் கோரினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .