2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

முப்படையினரின் பங்குபற்றலுடன் ‘நீர்க்காகம் தாக்குதல்’

அப்துல்சலாம் யாசீம்   / 2018 செப்டெம்பர் 26 , பி.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிரியால் கைப்பற்றப்பட்ட பிரதேசம் ஒன்றை, முழுமையாக இராணுவ நடவடிக்கை மூலம் மீட்டு எடுப்பது தொடர்பான “நீர்க்காகம் தாக்குதல் பயிற்சி”, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் தலைமையில், திருகோணமலை, குச்சவெளிப் பிரதேசத்தில், இன்று (26) இடம்பெற்றது.

இலங்கை உட்பட சர்வதேச நாடுகளின் முப்படையினரின் பங்குபற்றலுடன், மேஜர் ஜெனரல் நிஸங்க ரணவண்ணவின் முழுமையான வழிகாட்டலில் நடைபெற்ற இப்பயிற்சி நிகழ்வில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

கடந்த 6ஆம் திகதி ஆரம்பமாகி, இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் 20 நாள்களாக நடைபெற்று வந்த பயிற்சிகளின் இறுதி நாள் நிகழ்வாகவே, இந்நிகழ்வு ஒன்பதாவது ஆண்டாகவும் இடம்பெற்றது.

இலங்கையைச் சேர்ந்த 450 முப்படை அதிகாரிகளும் 3,000 வீரர்களும், 10 நாடுகளைச் சேர்ந்த 22 அதிகாரிகளும் 37 வீரர்களும், இப்பயிற்சி நடவடிக்கைகளில் பங்குபற்றினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .