2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இளைஞர்கள் கடத்தல் விவகாரம்; 13 பேருக்கு பிணை

Editorial   / 2020 ஜனவரி 24 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் கடற்படைத் தளபதியும் அண்மையில் அட்மிரல் ஒப் த ப்ளீட் ஆக பதவி உயர்வு பெற்ற வசந்த கரன்னகொடவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மீண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது.

2008ஆம் ஆண்டு தமிழ் இளைஞர்கள் உட்பட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு  கொழும்பு விசேட மேல் நீதிமன்றில் இன்று (24) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, நீதிமன்றின் உத்தரவுக்கு அமைய முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட மன்றில் முன்னிலையாகியிருக்கவில்லை.

அதனையடுத்து, அவரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மீண்டும் நோட்டிஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது.

எனினும், முன்னாள் கடற்படை பேச்சாளர் கொமாண்டர் டீ.கே.பி. தசாநாயக்க உள்ளிட்ட 13 பேர் நீதிமன்றில் முன்னிலையான நிலையில், பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

தலா 5 இலட்சம் ரூபாய் ரொக்கப்பிணையும் 25 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சரீரபிணையில் இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், இவர்கள் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டதுடன், சந்தேக நபர்களின் மனைவிகளை பிணையாளர்களாக வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், வழக்கு விசாரணை பெப்ரவரி 07 திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .