2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’குறைசொல்வோர் பாதீட்டைத் தயாரியுங்கள்’

Editorial   / 2019 மார்ச் 07 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதியமைச்சர் மங்கள சமரவீரவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பாதீடு, அரசாங்கத்தைப் பொறுத்தமட்டில் திறமானதாகவும் எதிர்க்கட்சியைப் பொறுத்தமட்டில் வீணானதாகவும் இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஊடகப் பிரதானிகளுடனான சந்திப்பு நேற்று (06) காலை, கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றபோது, மேற்படி விடயத்தை ஜனாதிபதி தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கூறுகையில்,

“வரவு - செலவுத் திட்டத்தினூடாக அனைத்து மக்களது மனதையும் வென்றுவிட முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தேவையிருக்கும். அதை எல்லோராலும் நிறைவேற்ற முடியாது. மங்களவின் பாதீடு நல்லதா கெட்டதா என்று நால் சொல்லமாட்டேன். ஆனால், இதில் குறையிருக்கிறது என்று சொல்கின்ற ஆய்வாளர்கள், ஒரு பாதீடு இப்படித்தான் இருக்கவேண்டும் என்று தயாரித்து என்னிடம் தாருங்கள். அதனை நாங்கள் பரிசீலிக்கத் தயாராக இருக்கிறோம்” என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சவால்விட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .