2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

புதிய அரசமைப்புக்கான மூல வரைவினால் சபையில் சலசலப்பு

Editorial   / 2018 ஜூலை 19 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய அரசமைப்புக்கான மூல வரைவு ​தொடர்பில், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்ட வாதப் பிரதிவாதங்களினால், சபையில் சற்று சலசலப்பு ஏற்பட்டது.

மூல வரையில் மூன்று பேரை கையொப்பமிட்டுள்ளனர் என்றும் அந்த கையொப்பத்தில் ஒன்று, போலியான​து என்றும் எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டினர்.

எனினும், கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, தேர்தல் நடவடிக்கைகளுக்காக, சீனா நிறுவனமொன்றிடமிருந்து, 7 மில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டதாக, நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில், முக்கியமான விவாதமொன்று இன்று (19) நடைபெறவுள்ளது.

அதனை குழப்பியடிக்கும் செயற்பாடாகவே, இந்த குற்றச்சாட்டை கருதுவதாக, ஆளும்தரப்பினர் பதிலளித்தனர்.

ஆளும், எதிர் தரப்பைச் ​சேர்ந்தவர்களுக்கிடையிலான கருத்து மோதல்களினால், சபையில் சற்று சலசலப்பு ஏற்பட்டது. அதன்பின்னர், நாடாளுமன்ற நடவடிக்கைகள் அடுத்தக்கட்டத்துக்கு நகர்த்தப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .