2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ராஜிதவுக்கு சு.க. ஆதரவு

Nirshan Ramanujam   / 2017 ஓகஸ்ட் 27 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் பட்சத்தில் அமைச்சருக்கு ஆதரவாகவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயற்படும் என அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பேருவளையில் நேற்று (26) நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிக்க எந்த நிபந்தனைகளும் இன்றி சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் ஆதரவு வழங்குவார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ராஜிதவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 39 பேரின் கையொப்பத்துடன் சபாநாயகருக்கு கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .