2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

நீதிமன்ற உத்தரவை மீறிப் போராடிய நாகமுவ, குணரத்னம் 43 பேர் அடித்துக் கைது

Editorial   / 2020 ஜூன் 10 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீதிமன்றத் தடையுத்தரவை மீறி, கொழும்பில் நேற்று (09)ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், 43 பேர், கடும் அடிதடிப் பிரயோகத்துக்கு மத்தியில், கைது செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்க உயர்ஸ்தானிகராலயத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னிலை சோசலிசச் கட்சியின் முக்கிய உறுப்பினரான துமிந்த நாகமுவ உள்ளிட்ட 10 பேரும், கொழும்பு லிப்டன் சுற்று வட்டம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கட்சியின் பொதுச் செயலாளர் குமார் குணரத்னம் உள்ளிட்டோருமே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில், கறுப்பினத்தவர் ஒருவர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, மேற்படி ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்னாலோ அல்லது அதனை அண்டிய பகுதிகளிலோ ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டாமென, கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் நேற்று முன்தினம் (08) தடை உத்தரவு பிறப்பிக்கத்திருந்த நிலையில், அதனை மீறி மேற்படி தரப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (படப்பிடிப்பு; குஷான்பதிராஜ)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .