2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இங்கிலாந்துக்கெதிரான தொடரைக் கைப்பற்றியது மே. தீவுகள்

Editorial   / 2019 பெப்ரவரி 03 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, ஒரு போட்டி மீதமிருக்கையிலேயே மேற்கிந்தியத் தீவுகள் கைப்பற்றியது.

இத்தொடரின் முதலாவது டெஸ்டில் அபார வெற்றி பெற்றிருந்த மேற்கிந்தியத் தீவுகள், அன்டிகுவாவில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பித்து நேற்று முடிவுக்கு வந்த இரண்டாவது டெஸ்டையும் இலகுவாக வென்றமையைத் தொடர்ந்தே 2-0 என அசைக்க முடியாத முன்னிலையை இத்தொடரில் பெற்றுள்ளது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: மேற்கிந்தியத் தீவுகள்

இங்கிலாந்து: 187/10 (துடுப்பாட்டம்: மொயின் அலி 60, ஜொனி பெயார்ஸ்டோ 52, பென் போக்ஸ் 35 ஓட்டங்கள். பந்துவீச்சு: கேமார் றோச் 4/30, ஷனொன் கப்ரியல் 3/45, அல்ஸாரி ஜோசப் 2/38, ஜேசன் ஹோல்டர் 1/43)

மேற்கிந்தியத் தீவுகள்: 306/10 (துடுப்பாட்டம்: டரன் பிராவோ 50, கிரேய்க் பிறத்வெய்ட் 49, ஜோன் கம்பெல் 47, ஷை ஹோப் 44, ஷேன் டெளரிச் 31, ஜேசன் ஹோல்டர் 22, ஷிம்ரோன் ஹெட்மயர் 21 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஸ்டூவர்ட் ப்ரோட் 3/53, மொயின் அலி 3/62, பென் ஸ்டோக்ஸ் 2/58, ஜேம்ஸ் அன்டர்சன் 2/73)

இங்கிலாந்து: 132/10 (பந்துவீச்சு: ஜேசன் ஹோல்டர் 4/43, கேமார் றோச் 4/52, அல்ஸாரி ஜோசப் 2/12)

மேற்கிந்தியத் தீவுகள்: 17/0

போட்டியின் நாயகன்: கேமார் றோச்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .