2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இத்தாலிய சீரி ஏ: தோற்றது ஏ.சி மிலன்

Editorial   / 2019 செப்டெம்பர் 30 , பி.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், இன்று அதிகாலை இடம்பெற்ற ஃபியொரென்டினாவுடனான போட்டியில் 1-3 என்ற கோல் கணக்கில் ஏ.சி மிலன் தோல்வியடைந்தது. ஃபியொன்ரென்டினா சார்பாக, எரிக் புல்கர், கயெட்டானோ கஸ்ட்ரோவில்லி, ஃபிராங்க் றிபெரி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். ஏ.சி மிலன் சார்பாகப் பெறப்பட்ட கோலை ரஃபேல் லியோ பெற்றிருந்தார்.

இந்நிலையில், தமது மைதானத்தில் நேற்றிரவு இடம்பெற்ற போட்டியில் பிறெஸ்சியாவை நாப்போலி 2-1 என்ற கோல் கணக்கில் வென்றிருந்தது. நாப்போலி சார்பாக, ட்ரைஸ் மேர்ட்டன்ஸ், கொஸ்தாஸ் மனோலஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். பிறெஸ்சியா சார்பாகப் பெறப்பட்ட கோலை மரியோ பலோட்டலி பெற்றிருந்தார்.

இதேவேளை, லெக்கேயின் மைதானத்தில் நேற்றிரவு இடம்பெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் றோமா வென்றிருந்தது. றோமா சார்பாகப் பெறப்பட்ட கோலை எடின் டெக்கோ பெற்றிருந்தார்.

இந்நிலையில், தமது மைதானத்தில் நேற்றிரவு இடம்பெற்ற ஜெனோவாவுடனான போட்டியில் 4-0 என்ற கோல் கணக்கில் லேஸியோ வென்றிருந்தது. லேஸியோ சார்பாக, சேர்ஜி மிலின்கோவிக்-சவிச், ஸ்டெஃபான் றடு, ஃபிலிப்பே கைசெடோ, சிரோ இம்மொபைல் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றிருந்தனர்.

அந்தவகையில், இப்போட்டிகளின் முடிவில் சீரி ஏ புள்ளிகள் பட்டியலில் 18 புள்ளிகளோடு முதலாமிடத்தில் இன்டர் மிலன் காணப்படுவதோடு, 16 புள்ளிகளோடு இரண்டாமிடத்தில் நடப்புச் சம்பியன்களான ஜுவென்டஸும், 13 புள்ளிகளோடு மூன்றாமிடத்தில் அத்லாண்டாவும் காணப்படுகின்றன. 11 புள்ளிகளோடு ஐந்தாமிடத்தில் றோமாவும், 10 புள்ளிகளோடு ஆறாமிடத்தில் லேஸியோவும் காணப்படுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .