2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இலங்கை எதிர் தென்னாபிரிக்கா: இரண்டாவது போட்டி நாளை

Editorial   / 2018 ஜூலை 31 , பி.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் இரண்டாவது போட்டி, தம்புள்ளையில்  நாளை பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

முதலாவது போட்டியில், டெஸ்ட் தொடரைப் போலல்லாது இலங்கையணியின் சுழற்பந்துவீச்சாளர்களை தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்ட வீரர்கள் வெற்றிகரமாக எதிர்கொண்டிருந்த நிலையில், தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்ட வீரர்களுக்கெதிராக வேறு யுக்திகளை பயன்படுத்த வேண்டிய நிலையில் இலங்கையணி காணப்படுகின்றது. மறுபக்கமாக, முதலாவது போட்டியில் அணி பெற்ற குறைந்த ஓட்ட எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவது இலங்கையின் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு கடினமாக அமைந்திருக்கலாம்.

அந்தவகையில், குசல் பெரேரா, திஸர பெரேரா உபுல் தரங்க, அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் ஆகியோரிடமிருந்தும் இளம் வீரர்கள் குசல் மென்டிஸ், நிரோஷன் டிக்வெல்ல ஆகியோரிடமிருந்து இலங்கையணி ஓட்டங்களை எதிர்பார்க்கின்றது.

மறுபக்கமாக, முதலாவது போட்டியைப் போலவே இலங்கையணியின் சுழற்பந்துவீச்சாளர்களை வெற்றிகரமாக எதிர்கொள்வதிலேயே தென்னாபிரிக்க அணியின் வெற்றி தங்கியிருக்கின்ற நிலையில், அப்பணியை முதலாவது போட்டியில் ஆற்றிய ஜெ.பி டுமினி, அணித்தலைவர் பப் டு பிளெஸி ஆகியோரையே மீண்டும் தென்னாபிரிக்க அணி நம்பிக் காணப்படுவதுடன், ஹஷிம் அம்லாவிடமிருந்தும் பெரிய ஓட்ட எண்ணிக்கையொன்றை பெற எதிர்பார்க்கின்றது.

இரண்டு அணிகளிளும் முதலாவது போட்டியில் களமிறக்கியோரையே பெரும்பாலும் களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .