2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இலங்கை – பங்களாதேஷ் மோதலுடன் ஆரம்பிக்கின்றது ஆசியக் கிண்ணம்

Editorial   / 2018 ஜூலை 25 , பி.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஆசியக் கிண்ணத் தொடர், இலங்கை, பங்களாதேஷ் அணிகள் இவ்வாண்டு செப்டெம்பர் 15ஆம் திகதி மோதும் போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

ஆறு அணிகள் கொண்ட தொடராக நடைபெறும் ஆசியக் கிண்ணத் தொடரின் ஒரு குழுவில், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகியன இடம்பெற்றுள்ளதோடு, மற்றைய குழுவில் இந்தியா, பாகிஸ்தான், தகுதிப் போட்டிகளிலிருந்து தகுதி பெறும் அணியொன்று விளையாடவுள்ளது.

குழுநிலையில் ஒவ்வொரு அணியும் மற்றைய அணியுடன் விளையாடி, ஒவ்வொரு குழுவில் முதலிரண்டு இடங்களையும் பிடிக்கும் அணிகள் சுப்பர் – 4 சுற்றுக்குத் தகுதிபெறும். சுப்பர் – 4 சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்றைய அணியுடன் விளையாடி முதலிரண்டு இடங்களையும் பிடிக்கும் அணிகள், இவ்வாண்டு செப்டெம்பர் 28ஆம் திகதி இடம்பெறவுள்ள இறுதிப் போட்டியில் மோதவுள்ளன.

இந்தியாவில், இவ்வாண்டு செப்டெம்பர் மாதம் இடம்பெறும் தகுதிப் போட்டிகளில், ஹொங் கொங், மலேஷியா, நேபாளம், ஓமான், சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம் ஆகியன தமக்குள் முட்டி மோதி அவற்றில் வெற்றிபெறும் அணி ஆசியக் கிண்ணத்துக்கு ஆறாவதாகத் தகுதிபெறவுள்ளது.

இதேவேளை, உலக இருபதுக்கு – 20க்கு முன்பாக பங்களாதேஷில் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசியக் கிண்ணத் தொடரின் போட்டிகள் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளாக நடைபெற்ற நிலையில், அடுத்தாண்டு உலகக் கிண்ணம் இடம்பெறவுள்ள நிலையில் இம்முறை ஒருநாள் சர்வதேசப் போட்டிகளாக ஆசியக் கிண்ணத் தொடர் இடம்பெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .