2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஐபாரை வென்றது பார்சிலோனா

Editorial   / 2018 பெப்ரவரி 18 , பி.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், நேற்று  இடம்பெற்ற போட்டிகளில், பார்சிலோனா, வலென்சியா, செவில்லா ஆகிய அணிகள் வெற்றிபெற்றுள்ளன.

ஐபாரின் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், லியனல் மெஸ்ஸி வழங்கிய பந்தை போட்டியின் 16ஆவது நிமிடத்தில் லூயிஸ் சுவாரஸ் கோலாக்க ஐபார் அணிக்கெதிராக பார்சிலோனா முன்னிலைப் பெற்றது. பின்னர் போட்டி முடிவடையும் தருணத்தில், லியனல் மெஸ்ஸி உதைத்த உதையொன்றை ஐபார் அணியின் கோல் காப்பாளர் மார்கோ டிமிட்றோவிக் தடுக்க அவ்வுதை ஜோர்டி அல்பாவின் வழியே வர, அவர் அதனை போட்டியின் 88ஆவது நிமிடத்தில் கோலாக்க, போட்டி முடிவில், 2-0 என்ற கோல் கணக்கில் ஐபார் அணியை பார்சிலோனா வென்றது.

அந்தவகையில், இப்போட்டியுடன் சேர்த்து தொடர்ந்து 31 போட்டிகளில் தோற்கடிக்கப்படார்க அணியாக லா லிகா தொடரில் பார்சிலோனா வலம்வந்து, தாம் இவ்வாறு 2010-11ஆம் ஆண்டு காலப் பகுதியில் நிகழ்த்திய சாதனையை சமப்படுத்தியுள்ளது.

இதேவேளை, மலாகாவின் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில், 2-1 என்ற கோல் கணக்கில் மலாகாவை வலென்சியா வென்றது. வலென்சியா சார்பாக, பிரான்ஸிஸ் கொக்கிலன், டனி பரெஜோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். வலென்சியா சார்பாகப் பெறப்பட்ட கோலை பிறவுண் இடயே பெற்றிருந்தார்.

இந்நிலையில், லாஸ் பல்மாஸின் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில், 2-1 என்ற கோல் கணக்கில் லாஸ் பல்மாஸை செவில்லா வென்றது. செவில்லா சார்பாக, விஸாம் பென் யெடர், பப்லோ சரபியா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.  லாஸ் பல்மாஸ் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜொனத்ன் கல்லேரி பெற்றிருந்தார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .