2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

‘ஒவ்வொரு மணிநேரமும் போட்டியிட விரும்பினோம்’

Editorial   / 2019 பெப்ரவரி 18 , பி.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில், வெற்றியடைவது பற்றியோ, தோல்வியடைவது பற்றியோ சிந்தித்திருக்கவில்லை எனத் தெரிவித்துள்ள இலங்கை டெஸ்ட் அணியின் பதில் தலைவர் திமுத் கருணாரத்ன, ஒவ்வொரு மணிநேரமும் போட்டியிடவே விரும்பியதாகவும் தெரிவித்துள்ளார்.

முதலாவது டெஸ்டில் இலங்கைக்குக் கிடைத்த எதிர்பாராத வெற்றியைத் தொடர்ந்து, அப்போட்டியைப் பற்றிக் கருத்துத் தெரிவிக்கும் போதே, கருணாரத்ன இவ்வாறு தெரிவித்தர்ர.

"ஒவ்வொரு வேளையிலும் ஒவ்வொரு மணித்தியாலத்திலும் நாங்கள் போட்டியிட வேண்டுமென, போட்டியின் ஆரம்பத்தின் நான் தெரிவித்தேன். அவுஸ்திரேலியாவில், வெற்றிபெறுவதற்கான வாய்ப்பே எங்களுக்கு இருந்திருக்கவில்லை. நாங்கள் போட்டியிட்டிருக்கவில்லை. இங்கு, முதலாவது நாள் சிறந்ததாக அமைந்தது. அதன் பின்னர், இரண்டாவது நாளின் முதலாவது வேளையில் நாங்கள் துடுப்பெடுத்தாடத் தடுமாறினோம்" என அவர் தெரிவித்தார்.

தென்னாபிரிக்காவில் போட்டிகளை வெல்வது இலகுவானதல்ல எனத் தெரிவித்த அவர், தற்போது விளையாடும் இலங்கை அணி, இளைய அணியாக இருப்பதைச் சுட்டிக்காட்டியதோடு, வெறு சிலரே, இதற்கு முன்னர் அங்கு விளையாடியுள்ளனர் என்பதையும் தெரிவித்தார்.

இப்போட்டியில் இலங்கை அணி போட்டித் தன்மையை வெளிப்படுத்தியிருந்தாலும், வெற்றியை, குசல் பெரேராவே ஏற்படுத்தியிருந்தார். பத்தாவது விக்கெட்டுக்காக, அவரும் விஷ்வ பெர்ணான்டோவும், பிரிக்கப்படாத 78 ஓட்டங்களைப் பகிர்ந்தே, இவ்வெற்றியைப் பெற்றிருந்தனர்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், "குசலால் அதைச் செய்ய முடியுமென நாம் நம்பினோம். ஆனால், அவருக்கு உதவியளிக்க யாராவது மறுமுனையில் தேவைப்பட்டனர். கசுன் ராஜித ஆட்டமிழந்தபோது, குசல் அடித்தாட வேண்டுமென நாம் தெரிந்திருந்தோம். போட்டி எங்கள் கையில் இருந்தது என்று நாங்கள் நினைத்திருக்கவில்லை. ஆனால் அணியாக, குசல் அதைச் செய்ய முடியுமென நாம் நம்பினோம்" எனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .