2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

குளிர்கால ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் நோர்வே முதலிடம்

Editorial   / 2018 பெப்ரவரி 26 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்கொரியாவின் பியோங்சங்கில் இம்மாதம் ஒன்பதாம் திகதி ஆரம்பித்த குளிர்கால ஒலிம்பிக் நேற்று முடிவுக்கு வந்தது. இதில், 14 தங்கப் பதக்கங்கள், 14 வெள்ளிப் பதக்கங்கள், 11 வெண்கலப் பதக்கங்கள் உள்ளடங்கலாக மொத்தமாக 39 பதக்கங்களைப் பெற்ற நோர்வே பதக்கப் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றது.

14 தங்கப் பதக்கங்கள், 10 வெள்ளிப் பதக்கங்கள், 7 வெண்கலப் பதக்கங்கள் உள்ளடங்கலாக மொத்தமாக 31 பதக்கங்களை வென்ற ஜேர்மனி இரண்டாமிடம் பெற்றதுடன், 11 தங்கப் பதக்கங்கள், 8 வெள்ளிப் பதக்கங்கள், 10 வெண்கலப் பதக்கங்கள் உள்ளடங்கலாக மொத்தமாக 29 பதக்கங்களை வென்ற கனடா மூன்றாமிடம் பெற்றது.

ஐக்கிய அமெரிக்கா, 9 தங்கப் பதக்கங்கள், 8 வெள்ளிப் பதக்கங்கள், 6 வெண்கலப் பதக்கங்கள் உள்ளடங்கலாக மொத்தமாக 23 பதக்கங்களைப் பெற்று நான்காமிடம் பெற்றதுடன், நெதர்லாந்து, 8 தங்கப் பதக்கங்கள், 6 வெள்ளிப் பதக்கங்கள், 6 வெண்கலப் பதக்கங்கள் உள்ளடங்கலாக மொத்தமாக 20 பதக்கங்களை பெற்று ஐந்தாமிடத்தைப் பெற்றது.

பதக்கப் பட்டியலில் ஆறாமிடத்திலிருந்து 15ஆம் இடம் வரை நாடுகளின் நிலைகளும் பெற்ற பதக்கங்களும் பின்வருமாறு

நாடு                                                                       தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்

சுவீடன்                                                                  7               6                   1                 14

தென்கொரியா                                                   5               8                   4                 17

சுவிற்ஸர்லாந்து                                                  5               6                   4                 15

பிரான்ஸ்                                                              5               4                   6                 15

ஒஸ்திரியா                                                           5               3                   6                 14

ஜப்பான்                                                                4               5                   4                13

இத்தாலி                                                                3               2                   5                10

ரஷ்யாவிலிருந்தான ஒலிம்பிக் வீரர்கள்            2               6                   9                17

செக் குடியரசு                                                       2               2                   3                 7

பெலாரஸ்                                                              2                1                   0                 3

இதேவேளை, சீனா, ஸ்லோவாக்கியா, பின்லாந்து, பெரிய பிரித்தானியா, போலந்து, ஹங்கேரி, உக்ரேன் உள்ளிட்ட நாடுகள் ஆகக்குறைந்தது ஒரு தங்கப் பதக்கத்தை வென்றிருந்தன.

நேற்று இடம்பெற்ற நாட்டுக்குக் குறுக்கேயான பெண்களுக்கான 30 கிலோமீற்றர் பனிச்சறுக்கில், நோர்வேயின் மரிட் பிஜோர்கன் தங்கப் பதக்கம் வென்றதுடன், பின்லாந்தின் கிறிஸ்டா பர்மகொஸ்கி வெள்ளிப் பதக்கம் வென்றதுடன், சுவீடனின் ஸ்டினா நில்ஸ்சன் வெண்கலப் பதக்கம் வென்றார்.

இதேவேளை நான்கு ஆண்கள் பங்குபற்றும் குறுகிய பனிப்பாதையுடனான பொப்ஸ்லெய் விளையாட்டில், தங்கப் பதக்கத்தையும் வெள்ளிப் பதக்கத்தையும் ஜேர்மனி வென்றதோடு, தென்கொரியா வெண்கலப் பதக்கத்தை வென்றிருந்தது.

பெண்களுக்கான சுருள்வு விளையாட்டில், சுவீடன் தங்கப் பதக்கம் வென்றதுடன், தென்கொரியா வெள்ளிப் பதக்கம் வென்றதுடன், ஜப்பான் வெண்கலப் பதக்கம் வென்றது.

ஆண்களுக்கான ஐஸ் ஹொக்கியில், ரஷ்யாவிலிருந்தான ஒலிம்பிக் தடகள வீரர்கள் தங்கப் பதக்கம் வென்றதுடன், ஜேர்மனி வெள்ளிப் பதக்கத்தை வென்றதுடன், கனடா வெண்கலப் பதக்கத்தை வென்றிருந்தது.

இந்நிலையில், இந்த ஒலிம்பிக்கில் பங்கேற்ற ரஷ்யத் தடகள வீரர்களிடமிருந்து இனி ஏதாவது ஊக்கமருந்து மீறல்கள் வராவிட்டால், ரஷ்யா மீதான ஒலிம்பிக் தடை நீக்கப்படும் என சர்வதேச ஒலிம்பிக் செயற்குழு தீர்மானித்திருந்தது. எவ்வாறெனினும் நேற்று இடம்பெற்ற முடிவு நிகழ்வில் தங்களது நாட்டுக் கொடியுடன் பவனி வர ரஷ்ய தடகள வீரர்களை ஒலிம்பிக் செயற்குழு அனுமதித்திருக்கவில்லை.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .