2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

செரினாவை வென்று சம்பியனானார் கேர்பர்

Editorial   / 2018 ஜூலை 15 , பி.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய இராச்சியத்தின் தலைநகர் இலண்டனில் இடம்பெற்றுவந்த விம்பிள்டன் டென்னிஸ் தொடரில், உலகின் 10ஆம் நிலை வீராங்கனையான ஜேர்மனியின் அங்கெலிக் கேர்பர் சம்பியனானார்.

நேற்று  இரவு இடம்பெற்ற இறுதிப் போட்டியில், 23 தடவைகள் கிரான்ட் ஸ்லாம் சம்பியனான ஐக்கிய அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸை வென்றே தனது முதலாவது விம்பிள்டன் பட்டத்தை அங்கெலிக் கேர்பர் கைப்பற்றியிருந்தார்.

அந்தவகையில், உலகின் முன்னாள் முதல்நிலை வீராங்கனையான அங்கெலிக் கேர்பர், 6-3, 6-3 என்ற நேர் செட்களில் இன்னொரு முன்னாள் முதல்நிலை வீராங்கனையான செரீனா வில்லியம்ஸை வென்று தனது மூன்றாவது கிரான்ட் ஸ்லாம் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .