2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஜுவென்டஸின் முகாமையாளராக செல்சியின் முகாமையாளர்

Editorial   / 2019 ஜூன் 17 , பி.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூன்றாண்டு ஒப்பந்தமொன்றில், இத்தாலிய சீரி ஏ கால்பந்தாட்டக் கழகமான ஜுவென்டஸின் முகாமையாளராவதற்காக, இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சியிலிருந்து மெளரிசியோ சரி விலகியுள்ளார்.

இன்னொரு இத்தாலிய சீரி ஏ கழகமான நாப்போலியிலிருந்து கடந்தாண்டு ஜூலையில் செல்சியில் இணைந்த மெளரிசியோ சரி, இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் மூன்றாமிடத்துக்கு செல்சியை வழிநடத்தியதோடு, யூரோப்பா லீக் கிண்ணத்தையும் பெற்றுக் கொடுத்திருந்தார்.

இந்நிலையில், மெளரிசியோ சரிக்காக ஐந்து மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ஸ்களுக்கு மேற்பட்ட தொகையானது செல்சிக்கும், ஜுவென்டஸுக்குமிடையில் இணங்கப்பட்டதாக நம்பப்படுகின்றது. ஏனெனில், கடந்தாண்டு ஜூலையில் மூன்றாண்டு ஒப்பந்தத்தில் மெளரிசியோ சரி கைச்சாத்திட்டிருந்தார்.

அந்தவகையில், கடந்த பருவகாலத்தில் ஜுவென்டஸை விட்டு விலகிய சக இத்தாலியரான மாஸிமில்லியானோ அல்லெகிரியையே மெளரிசியோ சரி ஜுவென்டஸின் பிரதியீடு செய்யவுள்ளார்.

இந்நிலையில், செல்சியை 2003ஆம் ஆண்டு றோமன் அப்ரமோவிச் வாங்கிய பின்னரான ஒன்பதாவது முழுநேர முகாமையாளர் மெளரிசியோ சரி என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில், செல்சியின் முகாமையாளராக அதன் முன்னாள் நட்சத்திர மத்தியகளவீரரும் தற்போதைய இங்கிலாந்து சம்பியன்ஷிப் கழகமான டேர்பியின் முகாமையாளருமான ஃபிராங் லம்பார்ட் வருவது குறித்து பேசப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .