2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

டி லிஜிக்கை பார்சிலோனா கைச்சாத்திடாது?

Editorial   / 2019 மே 21 , பி.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

நெதர்லாந்துக் கழகமான அஜக்ஸின் இளம் பின்களவீரரான மத்தையாஸ் டி லிஜிக்கை கைச்சாத்திடுவதற்கான, இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸ், பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைன், ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பயேர்ண் மியூனிச்சுடனான போட்டியில் ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனா பின்தங்கியுள்ளதாக நம்பப்படுகிறது.

மத்தையாஸ் டி லிஜிக்கை கைச்சாத்திடுவதற்கான விருப்பங்களை ஐரோப்பிய மிகப்பெரிய கழகங்கள் சில மீளவும் வெளிப்படுத்தியமை, மத்தையாஸ் டி லிஜிக், அவரது முகவர் மினோ றயோலாவின் நிபந்தனைகளால் பார்சிலோனா மத்தையாஸ் டி லிஜிக்கை கைச்சாத்திடும் வாய்ப்பு குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கெனவே மத்தையாஸ் டி லிஜிக்குக்கு தாங்கள் வழங்குவதாக ஏற்கனவே உறுதியளித்ததுக்கு மேலதிகமாக தாங்கள் எதையும் வழங்க முடியாது என பார்சிலோனா தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மத்தையாஸ் டி லிஜிக், மினோ றயோலாவுடன் ஒப்பந்தமொன்றை பார்சிலோனா இன்னும் ஏற்படுத்த முடியாத நிலையில், ஜுவென்டஸ், பரிஸ் ஸா ஜெர்மைன், பயேர்ண் மியூனிச் ஆகியவை மத்தையாஸ் டி லிஜிக்குடன் மீண்டும் பேரம்பேசல்களை ஆரம்பித்துள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .