2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

தவறுக்கு மன்னிப்புக் கோரினார் வோணர்

Editorial   / 2018 மார்ச் 29 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகலாவிய கிரிக்கெட் ரசிகர்களை கலைக்குள்ளாக்கியமைக்கு மன்னிப்புக் கோருவதாக அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்ட வீரர் டேவிட் வோணர் தெரிவித்துள்ளார்.

பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஒரு வருட போட்டித் தடையையும், இரண்டு வருடங்களுக்கு அணியின் தலைமைப் பதவியை வகிப்பதற்கான தடையையும் எதிர்நோக்கியுள்ள டேவிட் வோணர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

'தவறுகளால் கிரிக்கெட்டின் மீது கறை படிந்துள்ளது" எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அணியின் துடுப்பாட்ட வீரரும், போட்டித்தடையை எதிர்நோக்கியுள்ளவருமான கமரன் பன்க்ரப்ட் மணல் கடதாசியின் மூலமாக பந்தினை சேதப்படுத்தியதை விசாரணைகள் ஊடாக உறுதிப்படுத்தியுள்ளதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

இந்த விடயத்தைக் கையாள்வது தொடர்பில் பன்க்ரப்ட்டுக்கு அறிவுரை வழங்கியமை தொடர்பில் வோணர் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .