2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நியூசிலாந்துக்கெதிரான 2ஆவது டெஸ்டில் முன்னிலையில் இங்கிலாந்து

Editorial   / 2018 ஏப்ரல் 01 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், கிறைஸ்ட்சேர்ச்சில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்த இரண்டாவது டெஸ்டின் இன்றைய மூன்றாவது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து முன்னிலை பெற்றுக் காணப்படுகிறது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இங்கிலாந்து, தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 307 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், ஜொனி பெயார்ஸ்டோ 101, மார்க் வூட் 52, அணித்தலைவர் ஜோ றூட் 37, மார்க் ஸ்டோன்மன் 35, பென் ஸ்டோக்ஸ் 25 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், டிம் செளதி 6, ட்ரெண்ட் போல்ட் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு, தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து, சகல விக்கெட்டுகளையும் இழந்து 278 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், பி.ஜெ வட்லிங் 85, கொலின் டி கிரான்ட்ஹொம் 72, டிம் செளதி 50, நீல் வக்னர் ஆட்டமிழக்காமல் 24 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ஸ்டூவர்ட் ப்ரோட் 6, ஜேம்ஸ் அன்டர்சன் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதையடுத்து, தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து இன்றைய மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 202 ஓட்டங்களைப் பெற்றவாறு காணப்படுகிறது. தற்போது களத்தில் ஜோ றூட் 30, டேவிட் மலன் 19 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமலுள்ளனர். முன்னதாக, ஜேம்ஸ் வின்ஸ் 76, மார்க் ஸ்டோன்மன் 60 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். பந்துவீச்சில், ட்ரெண்ட் போல்ட் இரண்டு, டிம் செளதி ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .