2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பாகிஸ்தான், இந்தியா வென்றன

Editorial   / 2018 ஜனவரி 16 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்தில் இடம்பெற்றுவரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் 19 வயதுக்குட்படோருக்கான உலகக் கிண்ணத் தொடரில், இன்று இடம்பெற்ற போட்டிகளில் பாகிஸ்தான், இந்தியா வென்றன.

பாகிஸ்தான், அயர்லாந்து அணிகளுக்கிடையே பங்கரேயில் இடம்பெற்ற போட்டியில், தமது முதலாவது போட்டியில் ஆப்கானிஸ்தானிடம் தோல்வியுற்ற பாகிஸ்தான், 9 விக்கெட்டுகளால் இத்தொடரின் தமது முதலாவது வெற்றியைப் பெற்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: பாகிஸ்தான்

அயர்லாந்து: 97/10 (28.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜொஷுவா லிட்டில் ஆ.இ 24 (20), சாம் மேர்பி 19 19 (40) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷகீன் அப்ரிடி 6/15, ஹஸன் கான் 3/16)

பாகிஸ்தான்: 98/1 (8.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: முஹம்மட் சயீட் ஆ.இ 43 (19), ஹஸன் கான் ஆ.இ 27 (21) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஆரோன் கெளலி 1/27)

போட்டியின் நாயகன்: ஷகீன் அப்ரிடி

இந்தியா, பப்பூவா நியூ கினி அணிகளுக்கிடையிலான மகட்டரேயில் நடைபெற்ற போட்டியில் 10 விக்கெட்டுகளால் வெற்றிபெற்ற இந்தியா, இத்தொடரில் தமது இரண்டாவது வெற்றியைப் பெற்று காலிறுதிப் போட்டிக்கான தமது வாய்ப்பை உறுதிப்படுத்திக் கொண்டது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இந்தியா

பப்புவா நியூ கினி: 64/10 (21.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஓவியா சாம் 15 (25), சைமன் அதாய் 13 (26), சினக அருவா 12 (19) ஓட்டங்கள். பந்துவீச்சு: அனுகுல் றோய் 5/14, ஷிவம் மவி 2/16)

இந்தியா: 67/0 (8 ஓவ. ) (துடுப்பாட்டம்: பிறித்திவி ஷா ஆ.இ 57 (39) ஓட்டங்கள்)

போட்டியின் நாயகன்: அனுகுல் றோய்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .