2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மியாமி பகிரங்க டென்னிஸ் தொடர்: வெளியேற்றப்பட்டனர் ஜோக்கோவிச், குவிற்றோவா

Editorial   / 2019 மார்ச் 27 , பி.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடாவில் இடம்பெற்றுவருகின்ற மியாமி பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து, உலகின் முதல்நிலை வீரரான நொவக் ஜோக்கோவிச், இரண்டாம்நிலை வீராங்கனையான பெட்ரா குவிற்றோவா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை இடம்பெற்ற தனது நான்காவது சுற்றுப் போட்டியில், ஸ்பெய்னின் றொபேர்ட்டோ பட்டிஸ்டா அகட்டிடம் 6-1, 5-7, 3-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தே, தொடரிலிருந்து சேர்பியாவின் நொவக் ஜோக்கோவிச் வெளியேற்றப்பட்டிருந்தார்.

இதேவேளை, இன்று அதிகாலை இடம்பெற்ற தனது நான்காவது சுற்றுப் போட்டியில், 7-5, 7-5 என்ற நேர் செட்களில் அவுஸ்திரேலியாவின் ஜோர்டான் தொம்ஸனை வென்ற உலகின் ஏழாம்நிலை வீரரான தென்னாபிரிக்காவின் கெவின் அன்டர்சன், காலிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

இந்நிலையில், நேற்றிரவு இடம்பெற்ற தனது நான்காவது சுற்றுப் போட்டியில், பிரித்தானியாவின் கைல் எட்முன்டை எதிர்கொண்ட நடப்புச் சம்பியனும் உலகின் ஒன்பதாம்நிலை வீரருமான ஐக்கிய அமெரிக்காவ்ன் ஜோன் இஸ்னர், 7-6 (7-5), 7-6 (7-3) என்ற நேர் செட்களில் வென்று காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இதேவேளை, இன்று காலை இடம்பெற்ற தனது நான்காவது சுற்றுப் போட்டியில், கனடாவின் டெனிஸ் ஷபொலொவ்வை எதிர்கொண்ட உலகின் 10ஆம் நிலை வீரரான கிரேக்கத்தின் ஸ்டெபனோஸ் சிட்டிபாஸ், 6-4, 3-6, 6-7 (3-7) என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.

இந்நிலையில், இன்று காலை இடம்பெற்ற தனது காலிறுதிப் போட்டியில், அவுஸ்திரேலியாவின் அஷ்லெய் பார்ட்டியை எதிர்கொண்ட உலகின் இரண்டாம்நிலை வீராங்கனையான செக் குடியரசின் பெட்ரா குவிற்றோவா, 6-7 (6-8), 6-3, 2-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .