2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

மீண்டும் வந்தார் செரினா வில்லியம்ஸ்

Editorial   / 2017 டிசெம்பர் 31 , பி.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

டென்னிஸ் பகிரங்கத் தொடர் வரலாற்றில் அதிக தனிநபர் கிரான்ட் ஸ்லாம் பட்டங்களாக 23 கிரான்ட் ஸ்லாம் பட்டங்களைக் கொண்டுள்ள ஐக்கிய ஐமெரிக்க வீராங்கனையான செரினா வில்லியம்ஸ், குழந்தையைப் பெற்றெடுத்து நான்கு மாதங்களில் போட்டிகளுக்கு திரும்பியுள்ளார்.

எவ்வாறெனினும், உலகின் முன்னாள் முதல்நிலை வீராங்கனையான செரினா வில்லியம்ஸ், ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபியில் நேற்று இடம்பெற்ற கண்காட்சிப் போட்டியொன்றில் 2-6, 3-6 (10-5) என்ற செட் கணக்கில் உலகின் ஏழாம் நிலை வீராங்கனையான லத்தீவியாவின் ஜெலினா ஒஸ்டபென்கோவிடம் தோற்றிருந்தார்.

கடந்தாண்டு ஜனவரில் அவுஸ்திரேலிய பகிரங்கத் தொடரில், எட்டு வார கர்ப்பத்துடன் சம்பியான பின், 36 வயதான செரினா வில்லியம்ஸ் கலந்துகொண்ட முதலாவது போட்டி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியின் ஆரம்பத்தில் தடுமாறிய செரினா வில்லியம்ஸ், முன்னர் போன்று வேகமானதாக சேர்வ் செய்திருக்கவில்லை என்பதோடு, ஜெலினா ஒஸ்டபென்கோவிடமிருந்து நேரே வந்த சில பந்துகளையும் தவறவிட்டிருந்தார். எவ்வாறெனினும் பின்னர் சுதாகரித்துக் கொண்ட செரினா வில்லியம்ஸ், தான் சேர்வ் செய்யும் வேகத்தை அதிகரித்ததுடம், அரங்கத்தின் இரண்டு புறமும் நகர்ந்து பந்துகளை எதிர்கொண்டிருந்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .