2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

முன்னிலையை அதிகரித்துக் கொண்ட சிற்றி

Editorial   / 2018 டிசெம்பர் 02 , பி.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரின் புள்ளிகள் பட்டியலில் தமது முன்னிலையை நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றி அதிகரித்துக் கொண்டது.

தமது மைதானத்தில் நேற்று  இடம்பெற்ற ஏ.எவ்.சி போர்ண்மெத் அணியுடனான போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே தமக்கும் நடப்பு இங்கிலாந்து பிறீமியர் லீக் பருவகால புள்ளிகள் பட்டியலில் இரண்டாமிடத்திலுள்ள லிவர்பூலுக்குமிடையிலான புள்ளிகள் வித்தியாசத்தை ஐந்தாக சிற்றி அதிகரித்துள்ளது.

இப்போட்டியின் ஆரம்பத்தில், சிற்றியின் முன்கள வீரரான லெரோய் சனே, கோல் கம்பத்தை நோக்கி உதைந்த பந்தை போர்ண்மெத்தின் கோல் காப்பாளர் அஸ்மிர் பெகோவிக் தடுக்க வந்த பந்தை சிற்றியின் மத்தியகள வீரர் பேர்னார்டோ சில்வா போட்டியின் 16ஆவது நிமிடத்தில் கோலாக்கி தனதணிக்கு முன்னிலையை வழங்கினார்.

இந்நிலையில், முதற்பாதி முடிவடைய ஒரு நிமிடமிருக்கையில், சக போர்ண்மெத் வீரர் சைமன் பிரான்ஸிடமிருந்து வந்த பந்தை தலையால் முட்டிக் கோலாக்கிய கலும் வில்சன் கோலெண்ணிக்கையைச் சமப்படுத்தினார்.

எனினும், சிற்றியின் டனிலோவின் உதையை அஸ்மிர் பெகோவ் தடுக்கவும் அதை போர்ண்மெத்தின் பின்கள நாதன் அகே வெளியேற்றாமல் விடவும் அதை 57ஆவது நிமிடத்தில் கோலாக்கிய சிற்றியின் முன்கள வீரர் ரஹீம் ஸ்டேர்லிங் தனதணிக்கு முன்னிலையை வழங்கியதோடு, போட்டி முடிவடைய 11 நிமிடங்களிருக்கையில் தமதணியின் இல்கி குன்டோகன் பெற்ற கோலோடு இறுதியில் 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

இதேவேளை, இங்கிலாந்து பிறீமியர் லீக்கில் நேற்று இடம்பெற்ற ஏனைய பிரதான அணியொன்றின் முடிவு பின்வருமாறு,

செளதாம்டனின் மைதானத்தில்,

செளதாம்டன் 2-2 மன்செஸ்டர் யுனைட்டெட்

முதற்பாதி முடிவில் 2-2

ஸ்டூவர்ட் ஆம்ஸ்ரோங் 13  றொமெலு லுக்காக்கு 33

செட்ரிக் சொராஸ் 20            அன்டர் ஹெரேரா 39


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .