2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

மே. தீவுகளுக்கெதிரான ODI தொடரை வென்றது பங்களாதேஷ்

Editorial   / 2018 ஜூலை 29 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகள், பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை 2-1 என்ற ரீதியில் பங்களாதேஷ் வென்றது. சென். கிட்ஸில் நேற்றிரவு இடம்பெற்ற மூன்றாவது போட்டியை பங்களாதேஷ் வென்றமையைத் தொடர்ந்தே குறித்த தொடரை பங்களாதேஷால் வெல்ல முடிந்தது.

இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ், 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 301 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், தமிம் இக்பால் 103 (124), மகமதுல்லா ஆட்டமிழக்காமல் 67 (49), ஷகிப் அல் ஹஸன் 37 (44), மஷ்ரபி மோர்தஸா 36 (25) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், அஷ்லி நேர்ஸ், அணித்தலைவர் ஜேசன் ஹோல்டர் ஆகியோர் தலா 2, தேவேந்திர பிஷூ, ஷெல்டன் கோட்ரல் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு, 302 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள், 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 283 ஓட்டங்களைப் பெற்று 18 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், றொவமன் பவல் ஆட்டமிழக்காமல் 74 (41), கிறிஸ் கெய்ல் 73 (66), ஷை ஹோப் 64 (94) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், மஷ்ரபி மோர்தஸா 2, மெஹடி ஹஸன் மிராஸ், ருபெல் ஹொஸைன், முஸ்தபிசூர் ரஹ்மான் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இப்போட்டியின் நாயகனாகவும் தொடரின் நாயகனாகவும் தமிம் இக்பால் தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .