2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மோசடியால் வாய்ப்புப் பெற்றதா கட்டார்?

Editorial   / 2017 ஜூன் 28 , மு.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

2022ஆம் ஆண்டு கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்தை நடாத்தும் வாய்ப்பை, மோசடி செய்து கட்டார் பெற்றது என்று கூறப்படுவது தொடர்பான அறிக்கையை, ஜேர்மனியப் பத்திரிகையான பில்ட் பிரசுரித்துள்ளது.  

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் நன்னெறிக் கோவை மீறல் முன்னாள் விசாரணையாளரான மைக்கல் கர்சியாவின் 2014ஆம் ஆண்டு அறிக்கையையே தாம் பெற்றதாக, பில்ட் தெரிவித்துள்ளது.  

பிரசுரிக்கப்பட்ட அறிக்கையில், சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளன அதிகாரி ஒருவரின் 10 வயது மகளுக்கு, இரண்டு மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டன என்று கூறப்பட்ட விவரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளது.  

இதேவேளை, கட்டாருக்கு வாய்ப்பு வழங்கப்படுவதற்கான வாக்கெடுப்பு இடம்பெறுவதற்கு முன்னர், சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளன அதிகாரிகள் மூவர், கட்டார் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தனிப்பட்ட விமானத்தில், பிரேஸிலின் றியோக்கு சென்றமையும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .