2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

லிவர்பூலை வென்றது பரிஸ் ஸா ஜெர்மைன்

Editorial   / 2018 நவம்பர் 29 , பி.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக் தொடரில், தமது மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற கடந்தாண்டு இறுதிப் போட்டி வரை வந்த லிவர்பூலுடனான குழு சி போட்டியொன்றில் பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைன் வென்றது.

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூலின் பின்கள வீரரான வேர்ஜில் வான் டிஜிக் விட்ட தவறொன்றைப் பயன்படுத்தி பரிஸ் ஸா ஜெர்மைனின் ஜுவான் பேர்னட் போட்டியின் 13ஆவது நிமிடத்தில் பெற்ற கோலின் மூலம் அவ்வணி முன்னிலை பெற்றது.

தொடர்ந்து, பரிஸ் ஸா ஜெர்மைனின் நட்சத்திர முன்கள வீரர் நேமர் ஆரம்பித்து வைத்த அதிரடி நகர்வின் மூலம் சக வீரரான எடின்சன் கவானி கோல்கம்பத்தை நோக்கி பந்தைச் செலுத்தியபோதும் அதை லிவர்பூலின் கோல் காப்பாளர் அலிஸன் தடுத்திருந்தார். எனினும் மீண்டும் வந்த பந்தை போட்டியின் 37ஆவது நிமிடத்தில் கோலாக்கிய நேமர், பரிஸ் ஸா ஜெர்மைனின் முன்னிலையை இரட்டிப்பாக்கினார்.

இதைத் தொடர்ந்து, போட்டியின் முதற்பாதி முடிவில் லிவர்பூலின் ஜேம்ஸ் மில்னரால் பெனால்டி மூலம் பெறப்பட்ட கோலே ஒரெயொரு கோலாக அமைந்தட நிலையில், இறுதியில், 2-1 என்ற கோல் கணக்கில் பரிஸ் ஸா ஜெர்மைன் வென்றது.

அந்தவகையில், குறித்த குழுவின் மற்றைய போட்டியில் சேர்பியக் கழகமான றெட் ஸ்டார் பெல்கிரேட்டை இத்தாலிய சீரி ஏ கழகமான நாப்போலி வென்றநிலையில், அவ்வணி குழுவில் முதல்நிலை வகிக்கிறது.

இந்நிலையில், அடுத்த மாதம் இடம்பெறவுள்ள றெட் ஸ்டார் பெல்கிரேட் அணியுடனான போட்டியில் வென்றால், இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்கு பரிஸ் ஸா ஜெர்மைன் தகுதிபெற்றுவிடும் என்ற நிலையில், லிவர்பூல் 1-0 என்ற கோல் கணக்கில் அல்லது இரண்டு அல்லது அதற்கு மேற்பபட்ட கோல்கள் வித்தியாசத்தில் நாப்போலியை வென்றாலே இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்குத் தகுதிபெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இலங்கை நேரப்படி இன்று அதிகாலையும் நேற்றிரவும் இடம்பெற்ற ஏனைய குழுநிலைப் போட்டிகளின் முடிவுகளின் அடிப்படையில், ஸ்பானிய லா லிகா கழகங்களான பார்சிலோனா, அத்லெட்டிகோ மட்ரிட், ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பொரூசியா டொட்டமுண்ட் ஆகியன இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளதுடன், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்குத் தகுதிபெறும் வாய்ப்பைத் தக்கவைத்துள்ளது.

பார்சிலோனாவுக்கெதிரான தமது இறுதிகுழுநிலைப் போட்டியில், நெதர்லாந்துக் கழகமான பி.எஸ்.வி ஐந்தோவனுக்கெதிராக இத்தாலிய சீரி ஏ கழகமான இன்டர் மிலன் பெறும் முடிவையொத்த அல்லது மேம்பட்ட முடிவைப் பெற்றால் இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்கு டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் தகுதிபெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை நேரப்படி இன்று அதிகாலையும் நேற்றும் இடம்பெற்ற முக்கிய குழுநிலைப் போட்டிகளின் முடிவுகள் பின்வருமாறு,

டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸின் மைதானத்தில், குழு பி

டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் 1 – 0 இன்டர் மிலன்

முதற்பாதி முடிவில் 0-0

கிறிஸ்டியன் எரிக்சன் 80

பி.எஸ்வி ஐந்தோவனின் மைதானத்தில், குழு பி

பார்சிலோனா 2 – 1 பி.எஸ்வி. ஐந்தோவன்

முதற்பாதி முடிவில் 0-0

லியனல் மெஸ்ஸி 61  லுக் டி ஜொங் 82

ஜெராட் பிகே 70

நாப்போலியின் மைதானத்தில், குழு சி

நாப்போலி 3 – 1 றெட் ஸ்டார் பெல்கிரேட்

முதற்பாதி முடிவில் 2-0

மரேக் ஹம்சிக் 11       எல் பரெளடு மொஹமட் பென் நெளபஹானே

ட்ரைஸ் மேர்ட்டன்ஸ் 33, 52

பொரூசியா டொட்டமுண்டின் மைதானத்தில், குழு ஏ

பொரூசியா டொட்டமுண்ட் 0-0 கிளப் புரூகே

அத்லெட்டிகோ மட்ரிட்டின் மைதானத்தில், குழு ஏ

அத்லெட்டிகோ மட்ரிட் 2 – 0 மொனாக்கோ

முதற்பாதி முடிவில் 2-0

கொகே 2

அன்டோனி கிறீஸ்மன் 24


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .