2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

வோணருக்கு சத்திரசிகிச்சை

Editorial   / 2019 ஜனவரி 22 , மு.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் உபதலைவரான டேவிட் வோணருக்கு, அவரது முழங்கையில் சிறிய சத்திரசிகிச்சையொன்று இன்று மேற்கொள்ளப்படவுள்ளது.

தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் பங்களாதேஷ் பிறீமியர் லீக்கில் விளையாடும்போது தனது முழங்கையில் வலி இருப்பதாக வோணர் தெரிவித்தமையைத் தொடர்ந்து அவர் நேற்று அவுஸ்திரேலியாவுக்கு திரும்பி பரிசோதிக்கப்பட்டபோதே அவர் முழங்கையில் சிறிய சத்திரசிகிச்சையொன்றை மேற்கொள்ளவேண்டியேற்பட்டுள்ளது.

அந்தவகையில், சத்திரசிகிச்சையின் பின்னர் தாங்கும் கயிறொன்றை ஒரு வாரத்துக்கு அணிவார் என எதிர்பார்க்கப்படுவதுடன், முழுமையான பயிற்சியை ஆரம்பிக்க பிறிதொரு மூன்று வாரங்கள் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வாறாயினும், குறித்த காயத்தால் உலகக் கிண்ணத் தொடரில் வோணர் பங்கேற்பதில் சிக்கலிருக்காதென்று கூறப்படுகிறது. இருப்பினும் வோணரின் முன்னாள் அவுஸ்திரேலிய அணித்தலைவரான ஸ்டீவ் ஸ்மித், வோணரை விட மோசமான காயத்தைக் கொண்டிருப்பதுடன் ஆறு வாரங்கள் வரைக்கும் தாங்கும் கயிறொன்றை அணிந்திருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பந்தைச் சேதப்படுத்தியமையில அவரவர் வகிபாகங்களுக்காக வோணர், ஸ்மித் மீது விதிக்கப்பட்ட ஓராண்டுத் தடை இவ்வாண்டு மார்ச் மாதம் 28ஆம் திகதியுடன் முடிவடைகிறது. அந்தவகையில், பாகிஸ்தானுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் மத்தியில் இவர்கள் இருவரும் விளையாட முடியும். எவ்வாறாயினும், இத்தொடருக்கு வோணர் தயாராகி விடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றபோதும் ஸ்மித் தயாராவது கடினமென்றே கூறப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .