2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஸ்பெய்ன் குழாமில் மொராட்டா இல்லை

Editorial   / 2018 மே 22 , பி.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடருக்கான ஸ்பெய்னின் 23 பேர் கொண்ட குழாமில், முன்கள வீரரான அல்வரோ மொராட்டா இடம்பெறவில்லை.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள ஸ்பெய்னின் பயிற்சியாளர் ஜுலன் லொபெடெகுய், ஒரே மாதிரியான நான்கு முன்கள வீரர்களை தாங்கள் கொண்டிருக்கவில்லையென்று கூறியதுடன், வெவ்வேறான திறமைகளைக் கொண்ட ஏனைய மூன்று வீரர்களைத் தெரிவுசெய்யததாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அல்வரோ மொராட்டா தவிர, மத்தியகள வீரரான சீஸ்க் பப்ரிகாஸ், இடது பின்கள வீரரான மார்கோஸ் அலோன்ஸோ, வலது முன்கள வீரரான ஹெக்டர் பெல்லரின் ஆகியோரும் குழாமில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

போர்த்துக்கல், மொராக்கோ, ஈரான் ஆகிய நாடுகளுடன் குழு பியில் உலகக் கிண்ணத்தில் இடம்பெற்றுள்ள ஸ்பெய்ன், தமது முதலாவது குழுநிலைப் போட்டியில் அடுத்த மாதம் 15ஆம் திகதி போர்த்துக்கல்லை எதிர்கொள்கிறது.

குழாம்:

கோல் காப்பாளர்கள்: டேவிட் டி கியா, பெபே றெய்னா, கெபா அரிஸபலகா

பின்கள வீரர்கள்: ஜோர்டி அல்பா, நாச்சோ மொன்றியல், அல்வரோ ஒட்றியோஸொலா, நாச்சோ பெர்ணான்டஸ், டனி கர்வகால், ஜெராட் பிகே, சேர்ஜியோ றாமோஸ், சீஸர் அத்பிலிகெட்டா

மத்தியுகள வீரர்கள்: சேர்ஜியோ புஷ்கட்ஸ், இஸ்கோ, தியாகோ அல்கான்டரா, டேவிட் சில்வா, அன்ட்ரேஸ் இனியஸ்டா, சாவுல் நிகூஸ், கொகே

முன்கள வீரர்கள்: மார்கோ அஸென்ஸியோ, லாகோ அஸ்பஸ், டியகோ கொஸ்டா, றொட்றிகோ மொரெனோ, லூகாஸ் வஸ்கூஸ்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .