2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

‘இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்படக் கூடாது’

Editorial   / 2020 பெப்ரவரி 16 , பி.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, க.விஜயரெத்தினம்

ஐ.நாவில், இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்படக் கூடாதென வலியுறுத்தி, வடக்கில் யாழ்ப்பாணத்திலும் கிழக்கில் மட்டக்களப்பிலும் மாபெரும் கவனயீர்ப்புப் பேரணியை நடத்தவுள்ளதாக, வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அமைப்பின் கிழக்கு மாகாணப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு ஊடக மய்யத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

இந்த ஊடக சந்திப்பில் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பின் திருகோணமலை மாவட்டத் தலைவி திருமதி கைரலி செல்வராசா, மட்டக்களப்பு மாவட்டத் தலைவி திருமதி மதனா பாலகிருஸ்ணராஜா, அம்பாறை மாவட்டத் தலைவி திருமதி ராஜ்குமாரி பாலகிருஸ்ணராஜா உட்பட அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள்.

இங்கு அவர்கள் மேலும் கருத்துரைக்கையில், “30(1) தீர்மானத்தில் உள்ளக விசாரணை வலியுறுத்தப்பட்டுள்ளதே தவிர, எந்தவோர் இடத்திலும் கலப்பு நீதின்றம் என்ற வார்த்தை பிரயோகிக்கப்படவில்லை. உள்ளக விசாரணை மூலம் தமிழ் மக்களுக்கு சாதகமான நிலை ஏற்படப்போவதில்லை.

“இலங்கை அரசாங்கத்துக்கு மூன்றாவது தடவையாகவும் வழங்கப்பட்ட 2 வருட கால அவகாசத்தின் ஒரு வருடம் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டாவது வருடத்தை வழங்குவதில் எந்தவொரு நியாயப்பாடும் இல்லை என்பதைப் பாதிக்கப்பட்ட மக்களாகிய நாம் வலியுறுத்த விரும்புகின்றோம்.

“நிறுவப்பட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் ஒரு கண்துடைப்பாகும். பொறுப்புக் கூறலும், தமிழ் மக்களுக்குரிய நீதியும் கிடைப்பதாக இருந்தால், குற்றவியல் விசாரணை, சர்வதேச குற்றவியல் விசாரணை மூலமாகவோ அல்லது சர்வதேச குற்றவியல் விசே தீர்ப்பாயத்தினூடாகவோ விசாரணை செய்யப்படல் வேண்டும்.

“இந்தக் கோரிக்கையை, ஜெனீவாவில் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் பங்கு கொள்ளும் உறுப்பு நாடுகளுக்கு பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்” என்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .