2024 மே 08, புதன்கிழமை

ஏறாவூரில் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைப்பு

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2017 ஓகஸ்ட் 20 , பி.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, ஏறாவூரில் சுமார் 258 மில்லியன் ரூபாய் செலவில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

ஏறாவூரின் வாவிக்கரை பூங்காவை அண்மித்த பகுதியில் அமையப்பெறவுள்ள சுற்றுலா பொழுதுபோக்கு விற்பனை மற்றும் தகவல் மையம் சுமார் 100 மில்லியன் ரூபாய் செலவிலும், ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கான மூன்று மாடி கட்டடத் தொகுதி மற்றும் வைத்தியர்களின் தங்குமிட கட்டடத் தொகுதி என்பன, 158 மில்லியன் ரூபாய் செலவிலும் நிர்மாணிக்கப்படவுள்ளன.

இவற்றுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுகள், கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தலைமையில், ஏறாவுரில் இன்று (20) நடைபெற்றன.

இந்நிகழ்வுகளில் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம், சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பைஸர் முஸ்தபா உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டு அடிக்கற்களை நாட்டி வைத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X