2024 மே 09, வியாழக்கிழமை

‘ஒரு சமூகம் சார்ந்தவராக ஆளுநர் செயற்பட்டால், த.தே.கூ மௌனம் காக்காது’

பேரின்பராஜா சபேஷ்   / 2019 ஜனவரி 06 , பி.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர், பல்லின சமூகத்துக்குரிய தலைமைத்துவம் இல்லாமல், ஒரு சமூகம் சார்ந்தவராகச் செயற்படும் பட்சத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மௌனம் காத்துக்கொண்டு இருக்காதென, அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.

ஜனாதிபதி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, கிழக்கு மாகாண ஆளுநர்களை நியமித்துள்ளார் எனவும் இதற்கும் த.தே.கூவின் மீது குற்றம் சுமத்துவது பிழையான விடயமெனவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, கிரான் பிள்ளையார் ஆலய முன்றில் நேற்று (05) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இச்சந்திப்பிப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய சிறிநேசன் எம்.பி, ஆளுநர்களாக நியமிக்கப்படுபவர்கள், பல்லின சமூகத்தினுடைய தலைவர்களாகச் செயற்பட்டு, சகலருக்கும் அபிவிருத்தி செய்ய வேண்டியவர்களாக இருக்க வேண்டுமென்றார்.

ஒக்டோபர் 26 ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் சில ஊடகங்கள் கூட ஒருதலைப் பட்சமாகச் செயற்பட்டனவெனவும் ஆனால், நாடு எதிர்நோக்கவிருந்த பாரிய ஆபத்தைக் கூட்டமைப்பு தடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், எதிர்வருகின்ற தேர்தல்களில், பொதுமக்கள் கவனமாகச் செயற்பட வேண்டுமெனக் குறிப்பிட்ட அவர், தமது அரசியல் இலாபத்துக்காகப் பிழையான வதந்திகளை மக்கள் மத்தியில் கூறுவதற்கு  மாற்று அணியினர் தயாராக உள்ளனரெனவும் மக்களின் ஆணையை விற்று, சுயநல அரசியல் செய்வதற்கு தாம் தயாராக இல்லையென்றும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X