2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

களுவாஞ்சிக்குடி வைத்தியசாலைக்கு மேலும் நிதி ஒதுக்கீடு

அப்துல்சலாம் யாசீம்   / 2018 செப்டெம்பர் 06 , பி.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுவாஞ்சிக்குடி, ஆதார வைத்தியசாலைக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட 6 மில்லியனுக்கு மேலதிகமாக மேலும் 5 மில்லியன் ரூபாய் சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசீம் வழங்கியுள்ளார்.

தற்போது, வழங்கப்பட்டுள்ள நிதி வைத்தியசாலையில் மருந்து களஞ்சியசாலையொன்றை நிர்மாணிப்பதற்காக பயன்படுத்தப்படுமெனவும், ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள 6 மில்லியனில் 5 மில்லியன் வைத்தியசாலையின் பாரிய திருத்த வேலைகளுக்கும் 1 மில்லியன் நீர்விநியோகம், புனரமைப்பு வேலைகளுக்கும் செலவிடப்படவுள்ளது.

மொத்தமாக 11 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. வைத்தியசாலையின் ஏனைய அபிவிருத்திப் பணிகளுக்கும் கட்டங்கட்டமாக நிதி உதவிகளை வழங்குவதற்கு பிரதி அமைச்சர் பைசல் காசீம் நடவடிக்கை எடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .