2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கிழக்கில் தமிழர்களினது கல்வியை வீழ்த்த ’திரைமறைவில் சதித்திட்டம்’

கனகராசா சரவணன்   / 2018 மே 21 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் இடமாற்றம் என்ற போர்வையில், தமிழ் மக்களின் கல்வியை வீழ்த்தி, கல்வியறிவில்லாத சமூகமாக மாற்றி, அவர்களைத் தமது அடிமைகளாக்கி, கிழக்கில் இருந்து தமிழர்களை விரட்டியடிக்க திரைமறைவில் சில இனவாத அதிகாரிகள், அரசியல்வாதிகள் சதித்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனரென, இந்து சம்மேளனத்தின் தலைவர் நாரா. அருண்காந்த் தெரிவித்தார்.

இந்து சம்மேளனத்தின் கல்வி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தரம் ​ஐந்து புலமைப்பரிசிலில் 100 புள்ளிகளுக்க மேல் பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு, மட்டக்களப்பு, வந்தாறுமூலை சனசமூக நிலையக் கட்டடத்தில், பிரதேச அமைப்பாளர் வே. நந்தகுமார் தலைமையில், நேற்று (20) இடம்பெற்றது. இதில் அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "மட்டக்களப்பு மாவட்டத்தில் பின்தங்கிய கிராமப்புறப் பாடசாலைகளில் ஏற்கெனவே ஆசிரியர் பற்றாக்குறை இருக்கின்ற நிலையில், அந்த பாடசாலைகளில் இருந்து ஆசிரியர்களை மேலதிகமாக 172 ஆசிரியர்கள் இருக்கின்ற மட்டக்களப்பு நகரப்புற வலயப் பாடசாலைகளுக்கு இடமாற்றப்படுகின்றனர்.

“கிராமப்புற பாடசாலைகளில் இருந்து இடமாற்றப்படுகின்ற ஆசிரியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற ஆசிரியர்களை, அந்தப் பாடசாலைகளுக்கு நியமிக்கப்படாமல் இருப்பதால், கிராமப்புறப் பாடசாலைகளில் எற்கெனவே இருந்த ஆசிரியர்களின் வெற்றிடத்தைவிட மேலதிகமான வெற்றிடங்கள் காணப்படுகின்றன.“இதனால் அந்தந்தப் பாடங்களை கற்பிக்கின்ற ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களினது கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

“கிழக்கு மாகாணத்தில், தமிழர்களுடைய கலை, கலாசாரம், பண்பாடுகள், அடையாளங்கள், சமூகக் கட்டமைப்பு, இனப்பரம்பல், அரச நிர்வாகத்தில் தமிழரின் வகிபாகம், காணிகள் இவை அனைத்தையும் மாற்றியமைக்கும் எண்ணமுடைய சில கைங்கரியமாக இது தெட்டத் தெளிவாகத் தெரிகின்றது.

“எனவே, பெற்றோர்களே மாணவர்களின் கல்வியில் விழிப்பாகவும் பாதுகாப்பாகவும் இருக்கவேண்டும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .