2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

குண்டு வெடிப்பையடுத்து அவசர கூட்டம் கூட்டப்பட்டது

Editorial   / 2019 ஏப்ரல் 21 , பி.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

மட்டக்களப்பு மாவட்டத்தில், இன்று (20) காலை இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தையடுத்து, மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் தலைமையில், மாவட்டச் செயலகத்தில், விசேட கூட்டம் இன்று (21) மாலை கூட்டப்பட்டது.

இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களாக எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, அலிஸாஹிர் மௌலானா, நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன், சா.வியாளேந்திரன், கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, மட்டக்களப்பு மாநகர முதல்வர் எஸ்.சரவணபவன் உட்பட இராணுவத்தினர், பொலிஸார் கலந்துகொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சம்பவத்தை சீர்செய்யும் வகையில், தொண்டர்களாக இராணுவத்தினரை ஈடுபடுத்த முடியும் என இராணுவ கொமாண்டர் அருண தெரிவித்தார்.

அவசியம் ஏற்படுமாயின், கிழக்கு மாகாண பாடசாலைகளை, மேலும் மூடுவதற்கு அனுமதி வழங்கப்படும் என்று, கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா அறிவித்தார்.

அத்தோடு, திங்கட்கிழமை, செவ்வாய்கிழமைகளில் அரச திணைக்களங்களில் அரச நிகழ்வுகள் அனைத்தும் இரத்து செய்யப்படும் என்று, கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .