2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

குழாய் மூலமான நீர் இன்மையால்மக்கள் சிரமம்

வடிவேல் சக்திவேல்   / 2019 ஏப்ரல் 18 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு -போரதீவுப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மண்டூர், கணேசபுரம், சங்கர்புரம் போன்ற கிராமங்களில், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையால் வழங்கப்பட்டுவரும் குழாய் மூலமான நீர், சீராகக் கிடைப்பதில்லையென, அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

தற்போதைய வரட்சி காரணமாக கிணறுகள் பெருவாரியாக வற்றிப்போயுள்ள நிலையில், அம்பாறை மாவட்டத்திலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்புறக் கிராமங்களுக்கு குழாய் மூலம் வழங்கப்படுகின்ற குடிநீர் சீராக வழங்கப்படாமையால், அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவிக்கின்றனர்.

சில உள் வீதிகளுக்கு குழாய் மூலமான குடிநீர் பெறுவதற்கான இணைப்புகள் இதுவரையில் வழங்கப்படவில்லை எனவும், அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் மண்டூர் நிலையப் பொறுப்பதிகாரி அ.ஜெகதீபனிடம் இன்று (18) தொடர்புகொண்டு வினவிய போது, தற்போது வரட்சிக்காலம் ஆகையால், நீர்த் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் ஒரு இடத்தில் சேமிக்கின்ற நீரைத்தான் பல இடங்களுக்கு அனுப்ப வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், “மக்கள் செறிவாக உள்ள இடங்களுக்குத்தான் தற்போதைக்கு நீர் வழங்கும் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஏனைய இடங்களுக்கு பொருத்துவதற்குரிய நடவடிக்கைகள், அடுத்த திட்டத்தினுடாகவே அமுல்படுத்தப்படும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .