2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கோறளைப்பற்று மத்தியில் 15பேர் சுயத்தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்

Editorial   / 2020 ஏப்ரல் 02 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

மட்டக்களப்பு, கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில், 15 பேர் சுயத்தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

வாழைச்சேனையில் ஐவரும், மயிலங்கரச்சையில் அறுவரும், மஜ்மாநகரில் நால்வருமாக, பதினைந்து பேர் சுய தனிமைப்படுத்தலில் அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் வெளிமாவட்டங்களிலிருந்து வந்தவர்கள் என்று அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவைச் சேர்ந்த பொது சுகாதார பரிசோதகர்கள், இவர்களது இல்லங்களுக்குச் சென்று  சுய தனிமைப்படுத்தல் தொடர்பிலான கடிதங்களை வீடுகளில் ஒட்டியுள்ளனர்.

அத்துடன், இரு வாரங்களுக்கு முன்பு,  குவைத், கட்டார், டுபாய் போன்ற நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த பதின்மூன்று பேர், சுய தனிமைப்படுத்தலில் இருந்து கொரோனா தொற்று இல்லை என்ற நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

 பொது சுகாதார பரிசோதகர்கள், இவர்களது இல்லங்களுக்குச் சென்று, இவர்களது தனிமைப்படுத்தல் காலம் முடிவடைந்து விட்டதற்கான மருத்துவ சான்றிதழை வழங்கியதுடன், காய்ச்சல், தடுமல் ஏதும் ஏற்பட்டால், அலைபேசி மூலமாக தங்களை தொடர்பு கொள்ளுமாறும் அல்லது வைத்தியசாலைக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .